தமிழகத்திற்கு மின் தடை – தமிழிசை

திமுகவை ஆட்சி நடத்த விடாமல், மத்திய அரசு தடை போட்டு வருவதை போல, ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த, முதலமைச்சர் நினைப்பதாக பிஜேபி மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.


புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் 135-வது பிறந்த நாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள, அவரது திருவுருவ சிலைக்கு தமிழிசை சௌந்தர ராஜன் இன்று மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பிஜேபி கூட்டணி பலமாக இருப்பதாகவும், திமுக கூட்டணியில் தான் பிரச்சினகைள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மத்திய அரசு தமிழகத்திற்கு தடை எதுவும் போடவில்லை, மாநில அரசு தான் மின் தடையை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version