சீர்காழி மகளிர் கல்லூரியில் ,தமிழச்சி சமத்துவ பொங்கல் விழா.பறையாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம்,மயிலாட்டம், ஒயிலாட்டம் என மாணவிகள் கலக்கல்.
சீர்காழி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் தமிழச்சி சமத்துவ பொங்கல் விழா கல்லூரி செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.விழாவில் மாவட்ட வளங்கள் அலுவலர் அர்ச்சனா,சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி மட்டும் கல்லூரி இயக்குனர் கல்லூரி முதல்வர் ஆகியோருடன் சீர்காழி நகர்மன்ற உறுப்பினர்கள் 12 பேர் இணைந்து சமத்துவ பொங்கல் அடுப்புகளை பற்ற வைத்து, பொங்கல் கொண்டாடினர்.பின்னர் கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியம்,பறையாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம்,மயிலாட்டம், ஒயிலாட்டம் ,வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், சிலம்பம் ,உரியடி, பாரம்பரிய விளையாட்டுகளான, தாயம், செல்லிக்கோடு ,பல்லாங்குழி, கண்ணாமூச்சி, ஒரு குடம் தண்ணி கொண்டு முதலிய விளையாட்டுகள் நடைபெற்றது.
