மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் நவம்பர் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் மணிவிழாவை முன்னிட்டு, மணிவிழா மாநாட்டு நிகழ்வுகள் நவ.1-ஆம் தேதி தொடங்கி நவ.10 வரை நடைபெறுகிறது. அவ்வகையில், இன்று நடைபெற்ற மணிவிழா மாநாட்டில், தருமையாதீன தமிழ்க்கல்லூரியில்; புலவர் பட்டம் பெற்ற 72 பேருக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், தமிழ்ப்பணிச் செம்மல் என்ற விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் காஞ்சிபுரம் தொண்டை மண்டலம் ஆதீனம், மயிலம் பொம்மபுரம் ஆதீனம், துறையூர் ஆதீனம், திருக்கோவிலூர் ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்களின் ஆதீனகர்த்தர்கள் கலந்துகொண்டு புலவர்களுக்கு வழங்கினர்.
