- சர்ச்சை அதிகாரி பாண்டியராஜன் உள்பட 33 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- பீஹார் தேர்தலில் இண்டி கூட்டணியுடன், கூட்டணி வைக்க முடியாது என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
- பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி குற்றம் புரிந்த சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- தமிழகம் முதல் காஷ்மீர் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
- அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் என திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
- எனது பொது வாழ்க்கையை முடித்து வைக்கவே வைகோ எனக்கு துரோகி பட்டம் கொடுத்துள்ளார். இந்த வார்த்தையை ஜீரணிக்கவே முடியவில்லை என்று ம.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
- விண்வெளி மையத்திலிருந்து மாலை 4.35 மணிக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தலைமையிலான குழுவினர் புறப்பட்டனர். இன்று மதியம் 3 மணிக்கு பூமிக்கு வந்தடைவார்கள்.
- புதுக்கோட்டையில் அரசுப் பள்ளியில் குழந்தைகளைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது சட்டப்படி குற்றம் என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையின் போது, மர்ம நபர்கள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- நன்றாக பேசிவிட்டு பின் அனைவர் மீதும் குண்டு வீசுகிறார் என ரஷ்ய அதிபர் புடின் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.


















