சென்னை :
தமிழகத்தில் வடமாநிலத்தவர்களின் பெருமளவான குடியேற்றம் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “பீஹார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கானோர் வாழ்வாதாரத்துக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி வருகின்றனர். குறிப்பாக பீஹாரிலிருந்து மட்டும் ஒன்றரை கோடி பேர் வந்து விட்டனர்.
இப்போது அவர்களுக்கு தமிழகத்தில் ஓட்டுரிமை வழங்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுக்கின்றனர். ஏற்கனவே, இவர்களின் வருகையால் ஹிந்தி மொழி மெதுவாக தமிழகத்தில் ஊடுருவி வருகிறது. அவர்களுக்கு வாக்குரிமையும் வழங்கப்பட்டால், தமிழகமும் வடமாநிலங்களைப் போல ஹிந்தி பேசும் மாநிலமாக மாறி விடும் அபாயம் உள்ளது,” என்றார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது: “தமிழ், தமிழ் எனச் சொல்லிக்கொண்டிருப்போரும் ஹிந்தி பேசும் சூழல் உருவாகிவிடும் நிலை வந்துவிட்டது. ஒருநாள் அரசியல், அதிகாரம் அனைத்தும் நம்மிடம் இருந்து விலகி விடும் சூழல் வந்தால், அன்றைக்கு நான் இந்த மண்ணில் வாழும் உரிமையே இழந்துவிடுவேன். அப்படி ஒரு நாள் வரக்கூடாது என்பதற்காகவே நான் எச்சரிக்கிறேன்,” என்று சீமான் வலியுறுத்தினார்.

















