தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் மாநில தலைவர் சண்முகசுந்தரம் ஆகிய 9 பேர் மீது நேற்று இரவு கைது செய்த தமிழக காவல்துறையை கண்டித்து மயிலாடுதுறை ஆனந்த் புரத்தில் டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் வயிற்றில் அடித்துக் கொண்டு கட்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் :-
தமிழக முழுவதும் கறிக்கோழி விலை உயர்ந்து காணப்படும் நிலையில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை பொய் வழக்கு போட்டு கைது செய்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம் உட்பட 9 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் குடிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதனை கண்டித்து மயிலாடுதுறை ஆன தாண்டாபுரம் பகுதியில் டெல்டா பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பொய் வழக்கு போட்டு ஈசன் முருகசாமி உட்பட விவசாயிகள் பலரும் காவல்துறையினரால் கைது செய்துள்ளதாகவும் , உடனடியாக அனைத்து விவசாயிகளையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த விவசாயிகள் பொங்கல் பண்டிகை வருகிறது விவசாயிகளின் வயிறு எரிகிறது என கோஷமிட்டு வயிற்றில் அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
பேட்டி
விவசாய அன்பழகன் டெல்டா பாசன விவசாய சங்க மாவட்ட தலைவர்.
