தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடங்கி 31 வது ஆண்டு அடி எடுத்து வைப்பதை தொடர்ந்து இன்று காலை விழுப்புரம் தமுமுக கட்சியின் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது தலைமையில் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் தமுமுக அலுவலகத்தில் அப்துல் சமத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
விஜய் கட்சி தொடங்கியதால் அனைத்து தரப்பு கட்சிக்கும் பாதிப்பு ஏற்படும் என டிடிவி தினகரன் பதிலுக்கு
மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகர் விஜய் தற்போது கட்சி தொடங்கியுள்ளார் இந்தக் கூட்டம் எல்லாம் வோட்டாக மாறுமா? இவர் எந்த அளவிற்கு அரசியல் களத்தில் தாக்குப்பிடிப்பார் என்பதை எல்லாம் தேர்தல் களத்திற்கு வந்து தேர்தலை சந்தித்த பின்பு தான் அதனை நாம் உறுதி செய்ய முடியும் அரசியல் எதிராக திமுகவையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் சொல்கிறார் ஆனால் கொள்கை எதிரியான பாஜகவிற்கு எதிராக அவர் முழங்குவதில்லை அவரது திரைப்படத்தில் ஒரு வாக்குக்காக சர்க்கார் திரைப்படத்தில் ஒரு வாக்குக்காக மிகப்பெரிய போராட்டத்தினை நடத்துவதை போன்று காட்டிய விஜய் அவர்கள் இன்றைக்கு பல கோடி ஓட்டுகளை திருட்டுத்தனமாக தேர்தல் ஆணையத்தோடு இணைந்து பாஜக மோசடி மூலமாக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது இதுகுறித்து இந்தியாவே எழந்து போராடிக் கொண்டிருக்கும் வேளையில் இது குறித்து வாய் திறக்காமல் இருக்கக்கூடிய விஜய் என்னவென்று சொல்வது, யாருக்காக இவர் வாயை மூடி இருக்கிறார் கள்ள மவுனம் காக்கிறார் என்பதெல்லாம் போக போக தெரிய வரும் கொள்கை எதிரியை எதிர்ப்பதில் தெளிவற்ற தன்மை வெளிப்பட்டு இருப்பதால் அவருடைய நிலைப்பாடு என்பது சட்டமன்றத் தேர்தலுக்கு பின்பு தான் தெரியவரும்
ஜனநாயகத்தின் அடித்தளம் வாக்குரிமை அந்த வாக்குரிமை இன்றைக்கு கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது, இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவினுடைய கை பாவையாக மாறி பல்வேறு மாநிலங்களில் வாக்குத்திருட்டில் ஈடுபட்டது இன்றைக்கு வெளிவந்துள்ளது, பாஜக வெற்றி பெறக்கூடிய வகையில் பல மாநிலங்களில் வாக்குகளை சேர்த்தும் வெற்றி பெற்றவர்களுக்கு ஏற்றார் போன்ற பீகார் போன்ற மாநிலங்களில் வாக்குகளின் நீக்கியும் செய்த செயல் ஆனது இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது அந்த மிகப்பெரிய தாக்குதலை பாஜக நடத்தி இருக்கிறது , அதற்கு எதிராக ராகுல் காந்தி அவர்கள் தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் தலைவர்கள் போராடி வருகிறார்கள் தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 நாடாளுமன்ற தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது ஆனாலும் சில தொகுதிகளில் அண்ணா திமுகவை இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளி பாஜக இரண்டாவது இடத்திற்கு வந்ததாக அதெல்லாம் எந்த நிலையில் நடந்தது தமிழ்நாட்டில் இது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டிய கட்டாய நிலை உள்ளது மோசடி செய்தது குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய வேண்டும். ராகுல் காந்தி கேட்கக்கூடிய டிஜிட்டல் மயமான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு இந்தியா முழுவதும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும், ராகுல் காந்தியின் இந்த செயல்பாட்டை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பின் மூலமாக பாஜகவின் மோடி அரசு வெளியூர் கொள்கையில் தோல்வியே இத காட்டுகிறது மோசமான வரி விதிப்பினை அமெரிக்கா விதித்திருப்பதன் மூலமாக தொழில் முடங்கக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரிய தொழில் பாதிப்பினை ஏற்ப்பட்டு உள்ளது, எதற்கும் கையால் ஆகாத அரசாங்கம் மிக மோமான வெளியுறவுக் கொள்கையை கொண்ட அரசாக இருப்பதுதான் இதற்கெல்லாம் அடிப்படை காரணம். என மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும்மான அப்துல் சமது விழுப்புரத்தில் பேட்டி அளித்தார்
