திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பன்னூர்,கீழச்சேரி,பேரம்பாக்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள்,கடம்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழ் நாடு அரசு வழங்கும் விலையில்லா இலவச மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர்கள் மோ.ரமேஷ், ஹரிகிருஷ்ணன்,
ஞானஒளி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும், கல்வித்துறை அலுவலர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
