திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் கன மழையில் அறுவடை நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் மழையில் சாய்ந்து சேதமடைந்தன. சேமிப்பு கிடங்குகளில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யாத காரணத்தால், நெல் கொள்முதல் நிலையத்திலும் நெல் மூட்டைகள் தேங்கி, விவசாயிகளிடமிருந்தும் நெல் கொள்முதல் பணி முழுமையாக நடைபெறாத நிலையில், மழை பெய்து நெல்மணிகள் முளைத்து பெரும் இழப்பை விவசாயிகள் சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில்… விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை டெல்டா மாவட்டங்களில் வலுத்து வரும் சூழலில்..
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக விவசாயிகள் நல சங்க தலைவர் சேதுராமன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில்..”பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 30,000 வழங்க வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக லாரிகள் மூலமாக கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.. என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பேட்டி: சேதுராமன்,
தலைவர்,
தமிழக விவசாயிகள் நல சங்கம்.திருவாரூர்
28.10. 2025.

















