சீர்காழியில் 1.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியின் பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் அவர்களின் முயற்சியில் புதிய கட்டிடம் 1.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு பணிகளும் முடிவடைந்து இன்று காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி அலுவலகப் பணியை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

















