தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நன்னிலத்தில் ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்க கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு பள்ளி மைதானத்தில் ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்க கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் :-மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், கூடுதல் ஆட்சியர் பல்லவிவர்மா,நன்னிலம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், நன்னிலம் பேரூராட்சி மன்றத்தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
