தமிழக காவிரி அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் கைதை கண்டித்து சீர்காழியில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் காரியமங்கலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓ என் ஜி சி நிறுவனத்திற்கு எதிராக பி ஆர் பாண்டியன் உட்பட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர் விக்ரபாண்டியத்தில் மீத்தேன் எடுப்பதற்கான கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு பணியை மேற்கொண்டு இருந்த நிலையில் அதற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது அப்பொழுது ongc நிறுவனத்தின் சொத்துக்களை சேதப்படுத்தியதற்கான வழக்கு திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது இதன் தீர்ப்பு அளிக்கப்பட்டது இதில் பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம் இதனை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையம் எதிரே தமிழக காவிரி அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பாக தமிழக காவிரி அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன் நேற்று கைது செய்ததை கண்டித்து விவசாயிகள் ஐம்பதுக்கு மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது உடனடியாக தமிழக பாண்டியன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்
















