சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக் காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டி விரைவில் டாக்டர். ராமதாஸ் தலைமையில்யில் மாபெரும் போராட்டம் சென்னை உயர் நீதிமன்றம் எதிரில் நடத்த இருப்பதாக சமூக நீதி பேரவையின் மாநில செயலாளர் கோபு தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிப் பேரவை ஆலோசனை கூட்டம் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அமைப்பின் மாநில செயலாளர் வழக்கறிஞர் கோபு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக் காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டி விரைவில் டாக்டர்.
ராமதாஸ் தலைமையில்யில் மாபெரும் போராட்டம் சென்னை உயர் நீதிமன்றம் எதிரில் நடத்த இருப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், பாட்டாளி மக்கள் கட்சியில் பதவிகள் நியமனம் செய்வதற்கும், நீக்குவதற்கும் டாக்டர் ராமதாஸுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று கூறிய அவர், தகுதி இல்லாத ஓர் நபருக்கு மாநில சமூக நீதிப் பேரவை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளதாக பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய பொழுது,
நான் முறையாக படித்து வழக்கறிஞர் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றேன் என்றும், இதே போன்று ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் வாக்களித்து வழக்கறிஞர்கள் சங்க பொறுப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
