மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அம்பாள் மயில் உருவில் இறைவனை பூஜித்த தாக புராண வரலாறு தெரிவிக்கும் இந்த ஆலயம் குறித்து தேவாரப் பாடல்கள் பாடல் பெற்றுள்ளன. ஆலயத்தில் 3ஆம் தேதி ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பத்து நாள் உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் சுவாமி மற்றும் அம்பாள் சர்வ அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. மயூரநாதர் அபயாம்பிகை ஊஞ்சலில் எழுந்தருள, எதிரே மயிலம்மன் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், திருவாசகப் பாடல்களை பக்தர்கள் பாட, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

















