திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளைவலியுறுத்தி சர்வேயர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தபோராட்டம்

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் களப் பணியாளர்களின் பணிச் சுமையை போக்கிட பணிகளை முறைப்படுத்திட வேண்டும், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீளப் பெற்றிடவேண்டும். புற ஆதாரம் மற்றும் ஒப்பந்த முறை பணி நியமனத்தை கைவிடவேண்டும், காலியாக உள்ள நில அளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய முரண் பாடுகளை களைந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட சர்வேயர்கள் கண்ட கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Exit mobile version