வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை நடத்துகிறது.
இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்களை புதுப்பிக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடங்கியுள்ளது. விரைவில் நடைபெற உள்ள தேர்தல்களை முன்னிட்டு இப்பணிகளை மேற்கொள்வது ஏற்றதல்ல என்று சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதேபோல், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் மனு தாக்கல் செய்துள்ளது.
ஏற்கனவே திமுக, ஆர்.ஜே.டி உள்ளிட்ட கட்சிகள் இதே விவகாரத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளன. இப்போது அவற்றோடு இணைந்து புதிய மனுக்களும் விசாரணைக்கு வர உள்ளன.
இந்த வழக்குகள் அனைத்தும் நாளை உச்ச நீதிமன்றத்தின் அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளன.















