பீஹாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்களை மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டுள்ளது.
பீஹாரில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடத்தப்பட்டன. இதற்கெதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. திருத்தப்பணியின் போது 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.
இதனை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிமன்றம், “நீக்கப்பட்ட பெயர்களில் 22 லட்சம் பேர் இறந்தவர்கள் என தேர்தல் கமிஷன் கூறுகிறது. அவர்கள் இறந்திருந்தால், பூத் அளவில் பெயர்கள் வெளியிடப்படாதது ஏன்? பொதுமக்களின் உரிமைகள் அரசியல் கட்சிகள் இடையே சிக்கிக்கொள்வதை விரும்பவில்லை” என்று தெரிவித்தது.
மேலும், தேர்தல் கமிஷன் அளித்த விளக்கத்தைப் பிறகு கேட்டபோது, சில நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தது. இதன் இடைக்கால நடவடிக்கையாக, 2025 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று, வரைவு பட்டியலில் இடம்பெறாத 65 லட்சம் பேரின் பெயர்களை மாவட்ட வாரியாக இணையத்தில் வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
















