மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் அமைந்துள்ளது.இந்த 24 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக கட்டிடங்கள்,உணவகம் மற்றும் திருமண மண்டபங்களில் தேங்கும் குப்பைகளை நாள்தோறும் நகராட்சியில் உள்ள நிரந்தர தூய்மை பணியாளர்கள் மற்றும் தற்காலிகத் தூய்மை பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கப்பட்டு அவை அகற்றப்படுகிறது இதனிடையே நகராட்சியில் உள்ள சுமார் 80க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.சீர்காழி நகரில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் உணவகங்களில் நாள்தோறும் தேங்கும் எச்சில் இலைகளை தூய்மைப்படுத்த கட்டணம் கொடுக்கப்பதாக கூறப்படுகிறது.குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அந்த தொகையை பிரித்துக் கொள்வதாக கூறப்படும் நிலையில் கடந்த இரு தினங்களாக சில குறிப்பிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் உணவகங்கள் மட்டும் திருமண மண்டபங்களில் இலைகளை எடுக்க வேறு நபர்களை வைத்து தூய்மை படுத்தி வருகின்றனர்.திருமண மண்டபத்தில் இலை எடுக்க சென்ற தூய்மை பணியாளரை உனக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது என வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில்.சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு 50 க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மை பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகரில் தூய்மை பணிகளை மேற்கொள்ளப்படாமல் நகரில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கியுள்ளது. தூய்மை பணியாளர்களின் தர்ணா போராட்டத்தை அறிந்த ஐந்துக்கும் மேற்பட்ட நகரமன்ற உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்களின் தர்ணா போராட்டம் குறித்து ஆணையரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஆணையர் மஞ்சுளா மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் சுப்புராயன் தற்காலிக தூய்மை பணியாளர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு புகார் கொடுங்கள் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தூய்மை பணியாளர்களின் தர்ணா போராட்டத்தால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
