தங்கம் விலையில் திடீர் சரிவு : இன்றைய புதிய நிலவரம்

சென்னை: சர்வதேச பொருளாதார மாற்றங்கள், ரூபாய்–டாலர் மதிப்பு மற்றும் உள்ளூர் கோரிக்கை ஆகியவற்றின் தாக்கத்தால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தாழ்வை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களாக உயர்வைத் தொடர்ந்து வந்த தங்கம், இன்று கணிசமாகக் குறைந்துள்ளது.

சனிக்கிழமை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.11,630 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,360 உயர்ந்து ரூ.93,040 ஆகவும் இருந்தது. ஆனால் இன்று தங்க சந்தை எதிர்பாராத விதமாக சரிவைக் கண்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம்: கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.11,520; ஒரு சவரன் ரூ.92,160., 18 காரட் தங்கம்: கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.9,610; ஒரு சவரன் ரூ.76,880. மற்றும் தங்கத்தோடு சேர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.171 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,71,000 ஆகவும் விற்பனையாகிறது.

தொடர்ந்து மாற்றமடைந்து வரும் தங்க விலை, பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில் நகை வாங்க திட்டமிடும் மக்களை எதிர்பார்ப்பில் வைத்துள்ளது.

Exit mobile version