தீபாவளிக்கு முன்பு ஒரு சவரனின் விலை ரூ.1 லட்சம் வரை உயர்ந்திருந்த தங்கம், அதற்குப் பிறகு தொடர்ந்து ஏற்றத்-தாழ்வுகளைச் சந்தித்து வருகிறது. நவம்பர் மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை மாற்றம் கொண்டே இருக்கும் நிலையில், நேற்று மட்டும் இரண்டு முறை விலை உயர்வு ஏற்பட்டது.
நேற்று மாலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,900 ஆகவும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.95,200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் இன்று (நவம்பர் 14) தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. கிராமுக்கு ரூ.60 குறைந்ததால், தற்போது 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.11,840க்கும், ஒரு சவரன் ரூ.94,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம் விலையும் சரிவைச் சந்தித்துள்ளது. கிராமுக்கு ரூ.65 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,875க்கும், ஒரு சவரன் ரூ.79,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையிலும் குறைவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.180 (ரூ.3 குறைவு) ஆகவும், ஒரு கிலோ ரூ.1,80,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம்–வெள்ளி விலையிலான இந்த திடீர் சரிவு நகை பிரியர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

















