திருவள்ளூர் அருகே மருத்துவ கல்லூரியில் பாரம்பரிய உடைகளை அணிந்து சமத்துவ பொங்கலை ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக மருத்துவ மாணவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருவள்ளூர் அடுத்த பாண்டூர் பகுதியில் உள்ள இந்திரா மருத்துவ கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவர்கள் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியை கொண்டாடினர். மருத்துவ கல்லூரி நிர்வாக இயக்குனர் இந்திராராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.இராஜேந்திரன், கலந்து கொண்டு மருத்துவ மாணவர்களுடன் சமத்துவ பொங்கலை கொண்டாடினர். இதில் மருத்துவ மாணவர்கள் பாரம்பரிய உடைகளான வேட்டி சட்டையும், புடவைகளும் அணிந்த வந்த மருத்துவ மாணவர்கள் நடனங்களாடி, மண் பானையில் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக கொண்டாடினர். இதனை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான உரியடித்தல், சிலம்பாட்டம், உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் பொங்கல் திருநாளை பறைசாற்றும் வகையில் கட்ட மாட்டு வண்டி , மண்பானை உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவ மாணவர்கள் ஆட்டம், பாட்டத்துடன் குத்தாட்டம் போட்டு சமத்துவ பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
