தேசிய கீதம் பாடலை தந்த ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை மணிமண்டபம் தமிழ்வளர்ச்சி & செய்திதுறை அமைச்சர்.M.P.சுவாமிநாதன் பேட்டி

தேசிய கீதம் பாடலை தந்த ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை மணிமண்டபம் தமிழக முதல்வர் அமைத்துத் தந்துள்ளார். சட்டமன்றத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று கூறும் மத்திய அரசு எங்கு சிலை மண்டபம் மண்டபம் காட்டியுள்ளது கூற முடியுமா? அவர்களின் திடீர் நாட்டுப்பற்று குறித்து கவலைப்பட தேவையில்லை, மயிலாடுதுறையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் பேட்டி

சட்டப்பேரவையின் முதல் நாளில் ஆளுநர் உரை தினத்தன்று தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததை கண்டித்து ஆளுநர் கூட்டத்தை புறக்கணித்தது குறித்த கேள்விக்கு,
தமிழக அரசு நிகழ்ச்சியில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இறுதியில் நாட்டுப்பன் பாடப்படுகிறது
குடியரசு தினவிழா மத்திய அரசு வழிகாட்டுதல்படி நடக்கிறது. அதில் தொடக்க முடிவு இரண்டிலும் நாட்டுப்பன் பாடப்பட்டது. அதை நாங்கள் குறைகூறவில்லை.
மத்திய அரசை திருப்திப்படுத்த வேண்டும் அவரது வாழ்த்கை பெற வேண்டும் என்று இதுபோல் செய்கிறார்கள். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். வங்கத்து கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை அமைத்து மரியாதை செய்தவர் நம் முதல்வர், ஆனால் மத்திய அரசு அவருக்கு சிலை மணிமண்டபம் கட்டவில்லை. ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன ஜிடி நாயுடு என்று அவரின் பெயரோடு வருவதால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் சுவாமி நாகப்ப படையாட்சி என்று பெயர் வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றார்.

Exit mobile version