பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி
வரும் 27 ஆம் தேதி திருவாரூரில் மாநிலம் தழுவிய கவனஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என அரசுகலைக்கல்லூரி கணினிபயிற்சி திட்ட பயிற்றுநர்கள் சங்க மாநிலதலைவர் பேட்டி
திருவாரூர் கடைதெருவில் உள்ள தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி கணினி பயிற்சி திட்ட பயிற்றுநர்கள் சங்கத்தினர் ஆலோசனைகூட்டம் மாநிலத்தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது ,
இதில் மாநிலச்செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் ,
இக்கூட்டத்தில் – தமிழ்நாடு முதலமைச்சர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணினி பயிற்றுநர்கள் பணியினை நிரந்தரப்படுத்தி பணி பாதுகாப்பு வழங்கவேண்டும் உள்ளிட்ட ஒற்றைகோரிக்கையை வலியுறுத்தி
வரும் 27 ந் தேதி திருவாரூரில் கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றினர் ,
தமிழ்நாடுஅரசு கணினி பயிற்சி திட்ட பயிற்றுநர்கள் சங்கத்தினரை அழைத்துப்பேசி கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் , பணி நிரந்தரம் செய்து பணிபாதுகாப்புடன்
காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினர்
