திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவருக்கு வரவேற்பு மாநில செயலாளர் சரவணன் பேட்டி

திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவருக்கு வரவேற்பு அளிக்க மாவட்ட, மாநில நிர்வாகிகள் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றனர் என சமூக நீதிப் பேரவை மாநில செயலாளர் சரவணன் பேட்டி.

திமுக அரசை அகற்ற வேண்டும் அரசியலமைப்பு சட்டத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். பல்வேறு மாவட்டங்களை கடந்து வரும் செப்டம்பர் 20ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் நடை பயணத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ள உள்ளார்.

இதற்காக பாட்டாளி மக்கள் கட்சியினர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டிய இடத்தினை ஆய்வு செய்து தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபயணத்தின் பொறுப்பாளராக, ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், சமூக நீதிப் பேரவை மாநில செயலாளருமான சரவணனை நியமித்துள்ளனர்.

நன்னிலத்தில் வரும் சனிக்கிழமை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ளக்கூடிய இடத்தை ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த சமூக நீதிப் பேரவை மாநில செயலாளர் சரவணன் கூறும்போது.. இவரது தலைமையில் திருவாரூர் மாவட்ட பாமக செயலாளர் ஐயப்பன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களது தலைவரை வரவேற்க தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் சின்னையா தமிழ்நாட்டில் தொடர்ந்து மேற்கொண்டு நடைபயணித்தில் வரும் இருபதாம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் மிகச் சிறந்த வரவேற்பு கொடுக்க காத்திருக்கிறோம்.

திருவாரூரில் வித்தியாசமாகவும், சின்னையா அன்புமணி ராமதாஸ் வரவேற்க அனைத்து ஒன்றிய செயலாளர்கள் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

பேட்டி : சரவணன் – சமூக நீதிப் பேரவை மாநில செயலாளர் – நடைபயண பொறுப்பாளர்

Exit mobile version