தேனியில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

தேனியில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது

சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, தேனி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து கிக் பாக்ஸிங் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்

தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி தேனியில் நடைபெற்று வருகிறது

தேனி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியானது வருகிற 10-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு அவர்களுக்கு பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்று வருகிறது

இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வரக்கூடிய மாதங்களில் தொடர்ந்து நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தனர்

இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார், தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் செயலாளர் சுரேஷ் பாபு, தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேஷன் தலைவர் மகாராஜன் மற்றும் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்

பேட்டி – சுரேஷ் பாபு (தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் செயலாளர்)

Exit mobile version