மயிலாடுதுறையில் மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டி நடைபெற்றது. மாநில முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு :-
கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியா சார்பில் மயிலாடுதுறையில் மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டிகள் நடைபெற்றது. இலங்கையில் இருந்து வந்திருந்த கராத்தே மாஸ்டர்கள் யசோதரன் மற்றும் சூசைநாதர் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். கராத்தே போட்டியில் சண்டை பிரிவு மற்றும் கட்டா பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. சிலம்ப போட்டிகளில் தனித்திறமை மற்றும் தொடு முறை ஆகிய இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். எட்டு வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு என்று தனியாக போட்டியும்,15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டவருக்கான போட்டிகளும் 18 வயதிற்கு மேற்பட்டோர் என்று மூன்று வயது பிரிவுகளில் போட்டிகளில் நடைபெற்றது. ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு மாஸ்டர் தயாளன் தலைமையிலான குழுவினர் பரிசுகளை வழங்கினர்.


















