மயிலாடுதுறை அருகே கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு :-
மயிலாடுதுறை மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் ஏ ஆர் சி விஸ்வநாதன் கல்லூரி இணைந்து நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டி மயிலாடுதுறை அடுத்த சித்தர் காட்டில் நடைபெற்றது, இதில் மாநில முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர், ஏழு முதல் ஒன்பது வயது வரை, ஒன்பது முதல் 11 வயது வரை 15, வயது வரை 25 வயது வரை, மற்றும் பொதுப் பிரிவு என்று ஐந்து பிரிவுகளாக இந்த போட்டி நடைபெற்றது. ஆறு சுற்றுக்களாக போட்டிகள் நடைபெற்றது. ஆடவர் மற்றும் மகளிர் காண போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற 15 போட்டியாளர்களுக்கு பரிசுத் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட சதுரங்க கழக தலைவர் டி.சிலம்பரசன் தலைமையில் நடைபெற்ற போட்டியை மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் நடத்தி வைத்தார்.
ஏ.ஆர்.சி விஸ்வநாதன் கல்லூரி முதன்மை நிர்வாக அதிகாரி ராஜா தங்கவேலு, கல்லூரி முதல்வர் ராமவெங்கடேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
