மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் ஆறு பாதி ஊராட்சியில் இன்று தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது முகாமினை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது மனுக்கள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது மேலும் முகாமில் கலந்து கொண்ட பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் பேசும் பொழுது ஒரே இடத்தில் அனைத்து பலன்களையும் மக்கள் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் முகாம் எனவும் இதில் வழங்கப்படும் பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
