சுவாதி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய திருக்கோயில்

உங்களின் நட்சத்திர ஆலங்களுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். 9 கிரகங்களும் 3 நட்சத்திரங்கள் வீதம் 27 நட்சத்திரங்களை ஆட்சி செய்கின்றன. இன்று அந்த வரிசையில் நாம பார்க்க போற சுவாதி நட்சத்திரத்தின் கோயில் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி சித்துக்காடு கிராமத்தில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன குண்தலாம்பிகை உடனுறை தாத்திரீஸ்வரர் திருக்கோயில்.

இந்த கோயில் மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியனால் 800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது என்பது இங்கு உள்ள கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.
கருங்கற்கலால் கோயிலானது ஐந்து நிலை கோபுரத்துடன் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தாத்திரீஸ்வரர் என்கின்ற நெல்லியப்பர் கோயிலில் தல மரமாக நெல்லிமரம் உள்ளது.

வடமொழியில் நெல்லிக்கு தாத்ரீ என்ற பெயர் இருப்பதால் அந்த பெயரில் இறைவன் அழைக்கப்படுகிறார். ஸ்ரீபிரசன்னா குண்தலாம்பிகை அம்பாள் சிலை பூந்தோட்டத்தில் கிடைக்கப்பெற்றதால் அம்பாள் பூங்குழலி என்றும் அழைக்கப்படுகின்றார்.
சுவாதி நட்சத்திரக்காரர்கள் பெரிய மனிதர்கள் இவர்களிடம் வலியவந்து பழகுவார்கள்.

ஆழ்ந்த தூக்கத்தில் கனவு காண்பது இவர்களின் சுபாவம். புத்தி கூர்மையுடனும் எதிலும் முன்யோசனையோடு செயல்படும். இவர்களின் சிறப்பம்சம் சுகபோகங்களை அனுபவிக்கும் யோகம் கொண்டவர்கள். நும்பிக்கை பாத்திரமாக நடந்து கொள்ளும் இவர்கள் பழகுவதற்கும் இனிமையானவர்கள்.

கோயில் உட்பிரகாரத்தில் தக்~pணாமூர்த்தி, கணபதி, சுப்ரமணியர், லட்சுமி, சரஸ்வதி, ஆதிசங்கரர் உள்ளிட்ட தெய்வங்கள் அமைந்துள்ளன. சித்தர்களின் சிற்பமும் தத்ரூபமாய் காட்சி தருகின்றன.

நந்தியின் சிலை மற்ற தலங்களில் உள்ளதை விட இங்கு சிறப்பானது. சாந்தமான நிலையில் மூக்கணாங்கயிறு இல்லாமல் நந்தி உள்ளது சிறப்பு காரைக்கால் அம்மையார் திருவலங்காடு கோயிலுக்கு செல்லும் வழியில் இங்குள்ள இறைவனை தரிசித்து சென்றுள்ளார் என்பது வரலாறு.

ஜடாமுடி சித்தர், ஸ்ரீ பிராண தீபிகா சித்தர், உள்ளிட்ட பல சித்தர்கள் வழிபட்ட தலமாக இருப்பதால் சித்துக்காடு என்றும் அழைக்கப்படுகிறது. சித்தர்கள் பல வகையான பட்சிகள் வடிவில் இறைவனை தரிசித்து வருவதாக கூறப்படுகிறது. கோயிலில் முக்கிய விழாக்களாக ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, மகா சிவராத்திரி, மார்கழி மாத விசே~ங்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

இக்கோயிலில் வழிபடுவோருக்கு திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம். அம்பாளையும் சிவனையும் வழிபடுவோருக்கு குழந்தை பேறு கிடைக்கும்
தலமாகவும் இக்கோயில் அமைந்திருக்கிறது.

மன்னன் இங்கு கோயில் திருப்பணியைத் துவங்கியபோது, இங்கிருந்த பூந்தோட்டத்தில் அம்பாள் சிலை கிடைக்கப்பெற்றான். பூங்குழலி என பெயர் சூட்டி அம்பாளுக்கு சன்னதி எழுப்பினான். திருமணத்தடை உள்ளவர்கள் நெல்லியப்பருக்கு, நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி மற்றும் பால் அபிN~கம் செய்வித்தும், பூங்குழலி அம்பாளுக்கு பச்சை வஸ்திரம், வளையல் அணிவித்து அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

கோயிலிலுள்ள தூண்களில் சில சித்தர்களின் சிற்பங்கள் உள்ளன. சிவன் சன்னதி எதிரேயுள்ள நந்தி, சாந்தமாக காட்சியளிக்கிறது. எனவே மூக்கணாங்கயிறு இல்லை. ஒரு தூணில் படுக்கை ஜடாமுடி சித்தர், நந்தி மண்டப தூணில் பிராண தீபிகா சித்தர் சிற்பங்கள் உள்ளன.

தன்னை வழிபடும் பக்தர்களுக்கு பிராணனை காப்பவராக அருளுவதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. ஆயுள் விருத்திக்காக, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு, நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார தலம் இது. திருக்கார்த்திகை, ஆடி, தை கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சுப்பிரமணியருக்கு விசே அபிN~கம் நடக்கும். திருக்கார்த்திகையன்று சிவன் சன்னதியில் 27 நட்சத்திரங்களுக்கும் தீபம் ஏற்றி பூஜை செய்கின்றனர்.

மார்கழியில் நடராஜருக்கு 10 நாள் விழா நடக்கும். திருவாதிரையன்று, நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இந்த திருமணத்தைக் கண்டவர்களுக்கு நல்ல மண வாழ்க்கை அமையும் என்பதும், தம்பதியர் கருத்தொற்றுமையுடன் வாழ்வர் என்பதும் நம்பிக்கை.

சுவாதி எனும் புனித சொல்லில் சிவ, வி~;ணு ஐக்கிய ஸ்வரூப சக்திகள் நிறைந்துள்ளன. நமசிவாய மந்திரத்தில் வகாரத்தில், சுவாதி என்ற புனிதச் சொல்லும் அடங்கும். அதேபோல் பெருமாளின் அம்சமான சுந்தரராஜர், வாசுதேவர், திரிவிக்ரமன் ஆகிய மூவருக்கும் உரிய பீஜாட்சர சக்திகள் நிறைந்தது சுவாதி என்ற சொல்.

எனவேதான் சுவாதி நட்சத்திர நாளில் சிவன், வி~;ணு இருவரும் இணைந்து அருளும் சித்துக்காடு தலத்திற்கு சென்று வழிபடுவது சிறப்பு. சுவாதியில் பிறந்தவர்கள் அந்த நட்சத்திர நாளில் இத்தல குபேரனுக்கு, நெல்லிக்காய்றுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து அதை ஏழைமக்களுக்கு தானம் செய்தால், செல்வம் பெருகி, வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம்.

Exit mobile version