மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் இருந்து மீன் பிடிக்க சென்ற 14 மீனவர்கள் இலங்கை கடற்படையாள் கைது

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வானகிரி மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ராமயன் என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த எட்டாம் தேதி 14 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வடக்கிலிருந்து மீனவர்களில் 12 பேர் வானகிரியை சேர்ந்தவர்கள், பாரதி என்ற ஒரு மீனவர் கடலூரை சேர்ந்தவர், மற்றொரு மீனவர் தரங்கம்பாடியை சேர்ந்தவர். இது குறித்து மின்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்ட பொழுது, மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் தங்களுக்கு கிடைத்ததாகவும், அடுத்த கட்ட சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், தெரிவித்துள்ளனர். மீனவர்களை மீட்டு படகுகளை மீண்டும் பெற்று தர வேண்டும் என்று மீனவ கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த திங்கட்கிழமை தரங்கம்பாடியில் இருந்து கிளம்பியதாகவும், படகு ரிப்பேர் ஆனதால் கடந்த சனிக்கிழமை ஜெகதா பட்டினத்தில் படகை சரி செய்து கடலுக்குள் சென்றதாகவும் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்

கைது செய்யப்பட்ட மீனவர்கள் விபரம்:

  1. ராஜேந்திரன் வானகிரி
  2. சிவதாஸ் வானகிரி
  3. குழந்தைவேல் வானகிரி
  4. ரஞ்சித் வானகிரி
  5. ராஜ் வானகிரி
  6. கலைவாணகிரி
  7. பாரதி கடலூர்
  8. குகன் வானகிரி
  9. பிரசாத் வானகிரி
  10. அகிலன் வானகிரி
  11. ஆகாஷ் வானகிரி
  12. ராபின் வானகிரி
  13. ராஜ்குமார் வானகிரி
  14. கோவிந்து தரங்கம்பாடி
Exit mobile version