சீர்காழி அருகே பாதரக்குடி கிராமத்தில் ஸ்ரீ சின்னமுத்து மாரியம்மன் ஆலயம் மற்றும் சித்தி விநாயகர், குபேர கணபதி, ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ சப்த கன்னிகள், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஐயப்பன் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பாதரங்குடி கிராமத்தில் அருள் பாளித்து வரும் ஸ்ரீ சின்னமுத்து மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக பரிவார ஆலயங்களான சித்தி விநாயகர், குபேர கணபதி,ஸ்ரீ பூர்ண புஷ்கலா உடனாகிய ஸ்ரீ அய்யனார் கன்னி, ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஐயப்பன் ஆலயங்கள் திரிப்படி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ சின்ன முத்து மாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகமானது கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, கும்பலந்தாரம் காலகிருஷ்ணன் யாகசாலை பிரவேசம் போன்ற முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி இன்று நான்காம் கால பூஜைகளுடன் பிரம்மஹத்தி ரக்ஷா பந்தன் பூஜையுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடுடன் கோயில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் ஸ்ரீ சின்னமுத்து மாரியம்மன் மற்றும் பரிவார ஆலயங்களில் அஷ்டபந்தன விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான கிராமவாசிகள் மற்றும் பொதுமக்கள், பக்த கோடிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















