ஏழை மக்களுக்கான திட்டங்களை தருபவர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிச்சாமி வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் திருமங்கலம் மோகன் பேச்சு
வில்லிவாக்கம் தொகுதியில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் மேடை ஏறி ஆதரவு
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட பாலியம்மன் கோவில் அருகில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நூத்தி ஒன்பதாவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் திருமங்கலம் மோகன் தலைமையில் வில்லிவாக்கம் மேற்கு பகுதி கழகச் செயலாளர் வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கழக அமைப்புச் செயலாளர் ராமு கழகச் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாபு முருகவேல் நடிகை செல்வி எமி ஆகியோர் சிறப்புரையாற்றியனர் நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆனந்தன் இளைஞர் அணி செயலாளர் அபிராமி பாலாஜி பகுதி செயலாளர்கள் பட்மேடு சாரதி கோகுல் கொளத்தூர் கணேசன் திருமங்கலம் கோதண்டன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள் வட்டக் கழக நிர்வாகிகள் பிற அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் பொதுக்கூட்டத்தில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் தான் சார்ந்த ரஜினி ரசிகர் மன்றத்தின் ஆதரவு அதிமுகவிற்கு என பேசியது வரவேற்பை பெற்றது
















