விழுப்புரம் வள்ளலார் சத்திய தர்மச்சாலை சார்பில், குளிர்காலத்தில் குளிரால் அவதிப்படும் சாலையோர மக்கள் உதவிக்காக சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழுப்புரத்தில் சாலையோரம் வாழும் ஏழை மக்களுக்கு மற்றும் மக்களுக்கு முதியோர்களுக்கு விழுப்புரம் வள்ளலார் சத்திய தர்மச்சாலை சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பாக அவர்களுக்கு மூன்று வேலை உணவும் தர்மசாலை மூலம் வழங்கப்பட்டு வருகிறது அதில் ஒரு பகுதியாக அமைப்பாளர் ஜெய அண்ணாமலை தலைமையில் குளிர்காலத்தில் குளிரால் அவதிப்படும் 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பெட்ஷீட்டுகள் வழங்கப்பட்டன. குளிர்காலத்தில் உடல் நலத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு, சமூக அக்கறையாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சியில் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு, சமூக சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். விழுப்புரம் நகரில் குளிர்கால உதவி நடவடிக்கையாக இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்கது
