அனைத்திந்திய கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற சிறப்பு கோரிக்கை பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..
சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் திடலில்
(ஏ ஐ சி சி சி ) எனப்படும் அனைத்து இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பின் சார்பில் சிறப்பு கோரிக்கைபொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த சிறப்பு கோரிக்கைபொதுக்குழு கூட்டத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோஜ் தங்கராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்..
இதனை தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களிடம்
இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகல்கள் அரசின் கவனத்திற்கு செல்ல அவரிடம் மனுவாக அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் பாஸ்டர் மோகன்தாஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது பல்வேறு கருத்துகளை முன் வைத்தார்.
அதில்…
சிறுபான்மை மக்கள் பாதுகாவலராக தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்றும்
அத்தகைய முதல்வரை சந்திப்பதற்கு எங்களுக்கு எங்களுக்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டு அனுமதி மறுக்கப்படுவதாகவும் எனவே விரைவில் வருகின்ற 2026 ஜனவரி எட்டாம் தேதி அன்று சேலம் மாநகரில் சுமார் 15 ஆயிரத்திற்கும்-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ மத போதகர்கள் ஒன்றிணைந்து இந்திய கிறிஸ்துவ சபையின் மாநில மாநாடு நடைபெற உள்ளதாகவும் இதில் தமிழக முதல்வரும் துணை முதல்வரும் பங்கேற்க வேண்டும் என இந்த அமைப்பின் சார்பில் அழைப்பு விடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏ. ஐ. சி. சி .சி அமைப்பின் பொதுச்செயலாளர் ரேவ்.கிங்ஸ்லி மோகன்தாஸ் மற்றும் பொருளாளர் ரேவ்.
பிரின்சிலி மோகன்தாஸ் மற்றும் அனைத்திந்திய கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பின் சார்பில் தமிழக முழுவதும் இருந்து ஏராளமான கிறிஸ்துவ
மத போதகர்கள் கலந்து கொண்டனர்..
