மயிலாடுதுறையில் சிவராத்திரியை முன்னிட்டு “அமர்நாத்” பனி லிங்கம் போல பனிக்கட்டியால் செய்யப்பட்ட 6 அடி சிவலிங்க சிறப்பு பூஜை

மயிலாடுதுறையில் சிவராத்திரியை முன்னிட்டு “அமர்நாத்” பனி லிங்கம் போல பனிக்கட்டியால் செய்யப்பட்ட 6 அடி சிவலிங்கம் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது , பாஜக சார்பில் நடத்தப்பட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த அறுபத்துமூவர்பேட்டை கிராமத்தில் உள்ள சப்த மாதா ஆலய வளாகத்தில் “அமர்நாத்” பனி லிங்கம் போன்று 6 அடி உயரத்தில் பனிக்கட்டியால் சிவலிங்கம் செய்து பிரதிஷ்டை செய்து சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பனிலிங்கத்துக்கு மலர்மாலைகள் மற்றும் தாமரை மணி மாலை ஆகியவை சாற்றப்பட்டு கோ பூஜை, அசுவபூஜை நடைபெற்றது. பின்னர் பனி லிங்கத்திற்கு சிவனுக்கு உகந்த வில்வ இலை மற்றும் மலர்களால் பூஜை செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 13 வது ஆண்டாக மயிலாடுதுறையில் சிவராத்திரியன்று பனிலிங்கம் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இதில் திருவண்ணாமலையில் இருந்து வந்த சிவனடியார்கள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். பாஜக முன்னாள் மாவட்ட துணை தலைவர் மோடி.கண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சேதுராமன், வெங்கடேசன், ஓபிசி அணி மாநில செயலாளர் ராஜ்மோகன், நகர துணை தலைவர் செல்வகுமார், நகர பொது செயலாளர் ராம்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version