மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது மடாதிபதியான ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் அறுபதாவது ஆண்டு மணி விழாவை முன்னிட்டு பத்து நாட்கள் நடைபெறும் விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏழாவது நாளாக இன்று ஆதீன மடத்தில் யானைகள், குதிரைகள் ஒட்டகங்கள், பசு, காளை, கழுதை, ஆடு நாய் சேவல் ஆகிய ஒன்பது வகையான 60 மிருகங்களுக்கு கோபூஜை கஜ பூஜை அஸ்வ பூஜை வடுக பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. மிருகங்களுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு புது வஸ்திரங்கள் சாத்தப்பட்டு மகாதீப ஆராதனை செய்யப்பட்டது. தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் முன்னிலையில் பெருஞ்சேரி தாருகா வனத்து சித்தர் பீடம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாட்டு பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

















