விழுப்புரம் ரெயிலடியில் புனித ஆரோக்கிய மாதா சிற்றாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 35-ம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா ஆலய அதிபர் தந்தை பிச்சைமுத்து, விழுப்புரம் புனித சவேரியார் ஆலய பங்கு தந்தை லூர்துசாமி, உதவி பங்கு தந்தை ஜியோ பிரான்சிஸ்சேவியர், விழுப்புரம் கிறிஸ்து அரசர் ஆலய உதவி பங்கு தந்தை சார்லஸ் ஆகியோர் கலந்துகொண்டு திருப்பலி நிகழ்த்தி அருளாசி வழங்கினர்.
தொடர்ந்து, ஆலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள், ரெயில்வே நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
