திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற குழந்தைகள் பருவ நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பங்கேற்று துவக்கி வைத்தார் .
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட தொடக்க நிலை இடையிட்டுச் சேவைகள் மையம் மற்றும் இதயங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் குழந்தைவு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது . இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பங்கேற்று துவக்கி வைத்தார்..
இம்முகாமில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு குளுக்கோஸ் அளவு மற்றும் மூன்று மாதத்திற்கான சராசரி குளுக்கோஸ் அளவு ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டது . தொடர்ந்து இருதயங்கள் அறக்கட்டளையின் மருத்துவ குழு குழந்தைகளை பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான குளுக்கோஸ் அளவீட்டு கருவிகள், வலியில்லா ஊசிகள், இன்சுலின் பம்ப், குளுக்கோஸ் மருந்துகள் என பல்வேறு சேவைகளை வழங்கியது.
மருந்துகளை பெற்றுக் கொண்ட குழந்தைகள் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையிலேயே தொடர்ந்து இலவசமாக மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தொடர்ந்து மாதத்திற்கு ஒருமுறை இதுபோன்று முகாம்கள் நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற்ற முகாமில் 34 முதல் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் , முதன்மை மருத்துவ அலுவலர், மருத்துவர்கள் மற்றும் பலர் பங்கு பெற்றனர்.

















