மயிலாடுதுறைக்குBJPமாநில தலைவர் நைனார் ராஜேந்திரன் வருகை ஒட்டி தொகுதிபொறுப்பாளர் அகோரம் சிறப்புஆலோசனை

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் 29ம் தேதி தமிழகம் தலைநிமிர, தமிழரின் எழுச்சி பயணத்தில் பாஜக மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் வருகை தர உள்ளதை அடுத்து பாஜ நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் திருவிழந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நகரத்தலைவர் ராஜகோபால் தலைமை நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக முன்னாள் மாவட்ட தலைவரும் சட்டசபைத் தொகுதி பொறுப்பாளருமான அகோரம் கலந்து கொண்டு மயிலாடுதுறைக்கு வருகை தரும் மாநில தலைவர் நைனார் ராஜேந்திரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும் கட்சியினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் தெய்வசிகாமணி, பொறுப்பாளர்கள் ராஜா,ஸ்ரீதர், தேவா, தகவல் தொழில்நுட்ப பிரிவு குருசங்கர் உட்பட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.!

Exit mobile version