மயிலாடுதுறையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கான சிறப்பு குழு ஆய்வுக்கூட்டம் இனிகோ இருதயராஜ் MLAஆய்வு

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கான சிறப்பு குழு ஆய்வுக்கூட்டம்:- சிறப்பு குழு உறுப்பினர் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ பங்கேற்று ஆய்வு நடத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்:-

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கான சிறப்பு குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சிறப்பு குழு உறுப்பினரும், திருச்சி (கிழக்கு) சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தலைமை வகித்து, சிறுபான்மையினரிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் தீர்வு காணப்பட்டும், தீர்வு காண்பதற்கான முன்னெடுப்புகள் தொடர்பாக விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சிறுபான்மையினர் நலத்திட்ட உதவிகள் தொடர்பாக விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். பின்னர், 10 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்பில் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின் உதவித்தொகைக்கான ஆணைகளையும், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் 5 பேருக்கு நல வாரிய அட்டையினையும் அவர் வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் மலைமகள், மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன், உதவி திட்ட அலுவலர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டன

Exit mobile version