தென் இந்திய அளவிலான கராத்தே போட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் 1800 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் ஜே.எஸ்.ஜே.,கராத்தே அகாடமி மற்றும் ஜப்பான் ஷிட்டோ ரூஜ் ஜென் கராத்தே இன்டர்நேசணல் அசோசியேஷன் இணைந்து நடத்தும் தென் இந்திய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த 1800 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.கட்டா, குமிட்டே உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரையில் தனித்தனியாக போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெறும் வீரர்கள் வரும் 2026 ஆண்டு தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதி பெறுவார்கள் என இதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
