கொள்ளையடித்த பணத்திலிருந்து ஓட்டுக்காக பணம் சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு

கொள்ளையடித்த பணத்திலிருந்து ஓட்டுக்காக பணம் கொடுத்தனர். ஆனால் இப்போது மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து ஓட்டு வாங்குகின்றனர். தேர்தல் நெருங்கி வரும்போது ஆயிரம் ரூபாய் எத்தனை ரூபாயாக பெருகுகிறது என்று தெரியாது. பணத்தை கொடுத்து ஓட்டை வாங்கி உங்கள் தலையில் 5 வருடம் மிளகாய் அரைப்பார்கள் என்று சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு.
உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் அதிக அளவில் போட்டியிட வேண்டும் தமிழகத்தில் யாராலும் மது கடைகளை மூட முடியாது பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மதுக்கடைகளை மூட முடியும் என்று சிங்க பெண்ணே எழுந்து வா என்ற தலைப்பில் மயிலாடுதுறையில் உரை:-

மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியில் சௌமியா அன்புமணி பங்கேற்றார். பேண்ட் வாத்தியங்கள் முழங்க பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமையில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சௌமியா அன்புமணிக்கு செங்கோல் வழங்கப்பட்டது. இதில் மாவட்டத்திலிருந்து பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சிங்க பெண்ணே எழுந்து வா என்ற தலைப்பில் பெண்களிடம் சௌமியா அன்புமணி கலந்துரையாடினார். சௌமியா அன்புமணி உடன் சேர்ந்து பெண்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய சௌமியா அன்புமணி கூறுகையில்
எவ்வளவு நீர் வந்தாலும் கொள்ளும் இடம் கொள்ளிடம் என்று கூறும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் இல்லை. தடுப்பணை கட்டாததால் கடல் நீர் உட்புகுந்து உப்பு தண்ணீர் கிடைக்கிறது. இந்த ஊரில் 10 வருடங்களுக்கு முன்பு சேல் கேஸ் மீத்தேன், பெட்ரோல் கெமிக்கல் கொண்டுவர முயற்சி செய்தனர். இந்தத் திட்டங்களை செயல்படுத்தி இருந்தால் கிராமங்களே காணாமல் போயிருக்கும். ஆற்காடு கடலூர் போன்ற மாவட்டங்களில் மின்சாரத்திற்காக விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பெற்றனர். நிலத்தை கொடுத்த விவசாயிகள் வீடு இல்லாமல் கிராமம் இல்லாமல் பட்டா இல்லாமல் தவித்து வருகின்றனர். அந்த நிலை இந்த டெல்டா மாவட்டத்திற்கு வந்திருக்கும். சேல் கேஸ், மீத்தேன், பெட்ரோல் கெமிக்கல் மண்டலம் உருவாக்க தயாராகிவிட்டனர். ஆனால் இதனை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு முதல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போராட்டங்கள் நடத்தி தடுத்து நிறுத்தியுள்ளார். அன்புமணி ராமதாஸின் போராட்டத்தால் தான் காவேரி டெல்டா மண்டலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டமாக உருவாக்கப்பட்டும் மருத்துவ வசதி கட்டமைப்புகள் உருவாக்கப்படவில்லை. மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. ஆட்சியாளர்கள் எதுவும் செய்யாததால் தான் அன்புமணி ராமதாஸ் 108 ஆம்புலன்ஸ் சேவையை கொண்டு வந்தார். மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் சாக்கடையில் நடந்து சென்று தான் பள்ளிக்கு செல்கின்றனர். பாதாள சாக்கடை திட்டத்தை சரி செய்யாமல் குழந்தைகளின் உயிரோடு விளையாடிக் கொண்டிருப்பதாக கடுமையாக குற்றம் சாட்டினார். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் மதுக்கடைகளை திறக்கின்றனர். காசே இல்லாமல் இருந்தாலும் ஆம்பளைங்க கையில் மட்டும் வாட்டர் வாங்குவதற்கு எப்படித்தான் காசு இருக்குன்னு தெரியல என்று நகைச்சுவையாக வேதனையை வெளிப்படுத்திய சௌமியா அன்புமணி 100 நாள் வேலை திட்டம் முறையாக நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டினார். 100 நாள் வேலைக்கான சம்பளம் மத்திய அரசிடம் இருந்து வந்து விடுகிறது. ஆனால் அது எங்கே போகிறது என்று மக்களாகிய நீங்கள்தான் கேட்க வேண்டும். கொள்ளையடித்த பணத்திலிருந்து ஓட்டுக்காக பணம் கொடுத்தனர். ஆனால் இப்போது மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து ஓட்டு வாங்குகின்றனர். தேர்தல் நெருங்கி வரும்போது ஆயிரம் ரூபாய் எத்தனை ரூபாயாக பெருகுகிறது என்று தெரியாது. பணத்தை கொடுத்து ஓட்டை வாங்கி உங்கள் தலையில் 5 வருடம் மிளகாய் அரைப்பார்கள். மக்களை கண்டு கொள்ள மாட்டார்கள். எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற மாட்டார்கள் ஏமாற்றுவார்கள் மக்கள் ஏமாற வேண்டாம்.

தமிழக அரசியலில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் 70 சதவீதத்திற்கு மேல் உள்ளனர் எனவே அதிகமான மகளிர் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் அரசியலில் ஈடுபட வேண்டும், பெண்கள் வெற்றி பெற்றால் தங்கள் பகுதிகளுக்கு வேண்டிய சாலை வசதி மின்விளக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உங்களால் செய்து கொள்ள முடியும் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் எனவே அதிக அளவில் மகளிர் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினார். தமிழகத்திலே போதை மது உள்ளிட்ட பழக்கங்களை தடை செய்ய வேண்டும் மதுக்கடைகளை மூட இங்கு யாராலும் முடியாது பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மது கடைகள் மூடப்படும் நமது குழந்தைகளின் எதிர்காலம் காக்கப்படும் என்றார் தமிழகத்தில் சின்ன சின்ன குழந்தைகள் கூட குடிக்கு அடிமையாகும் நிலையை பார்க்க முடிகிறது. இதனை மாற்ற வேண்டும் டெல்டா மாவட்டங்களில் நீர் மேலாண்மை திட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட எவ்வளவோ திட்டங்கள் உள்ளது. ஆனால் இவர்கள் எந்த திட்டத்தையும் கொடுக்க மாட்டார்கள் உங்களை ஏமாற்ற வேண்டும் என்பதுதான் இவர்களது ஒரே திட்டம் எப்படி எல்லாம் பெண்களை ஏமாற்றி அவர்களது ஓட்டை வாங்கலாம் என்பதுதான் அவரது திட்டமாக உள்ளது நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக அன்புமணி அண்ணனுடன் தங்கைகளாக நிற்க வேண்டும் அப்படி நீங்கள் உறுதுணையாக இருந்தால் எப்படி டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உறுதி செய்தோமோ அதே போல் டெல்டா மாவட்டத்தில் போதை இல்லாத பகுதியாக நம்மால் மாற்ற முடியும் மது போதை மதுப்பழக்கத்தில் சிக்கி பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிகமாக நடைபெறுகிறது பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் முதலில் பாதுகாப்பு கொடுங்கள் பாலியல் துன்புறுத்தல்களால் பெண்கள் குழந்தைகள் மட்டும் பாதிக்கப்படவில்லை சிறுவர்களும் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே குழந்தைகளையும் சிறுவர்களையும் நாம் கவனமுடன் பாதுகாக்க வேண்டும் என்றார்.

Exit mobile version