13 வயது சிறுவனாக ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்று அதிர்ச்சி அளித்த வைபவ் சூர்யவன்ஷி, தற்போது இந்திய U-19 அணியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வரலாற்றுச் சாதனைகளை எழுதி வருகிறார். இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் விளக்கிய இன்னிங்ஸ், ரசிகர்களையும் முன்னோடி வீரர்களையும் வியக்க வைத்துள்ளது.
ஐபிஎல் பிளட்ச் முதல் U-19 அசத்தல் வரை
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.1.10 கோடிக்கு தேர்வு செய்யப்பட்ட 13 வயது வைபவ் சூர்யவன்ஷி, ஏற்கெனவே தன் திறமையால் அனைவரையும் கவனம் ஈர்த்திருந்தார். ஆனால், U-19 அணியில் அவர் கொடுத்த தாக்கம் இன்னும் அதிகமானது.
9 சிக்சர்களுடன் பளீச்! – இங்கிலாந்துக்கு எதிராக அபார ஆட்டம்
இந்திய யு-19 அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது.
மழை காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து U-19 அணி 268 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரராக வந்த சூர்யவன்ஷி, 20 பந்துகளில் அரைசதம் அடித்து அதிர வைத்தார். அவர் 31 பந்துகளில் 9 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடித்து 277 ஸ்டிரைக் ரேட்டுடன் 86 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டத்தால் இந்திய அணி 34.3 ஓவரிலேயே இலக்கை எட்டியது.
சூர்யவன்ஷியின் இரட்டை சாதனைகள்
ஒரே இன்னிங்ஸில் 9 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய U-19 வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
20 பந்துகளில் அரைசதம் அடித்து, ரிஷப் பண்ட் (18 பந்துகள்)க்கு அடுத்ததாக 2-வது அதிவேக யு-19 அரைசதம் என்ற சாதனையும் படைத்துள்ளார்.