காருக்குள் உஷ்… உஷ்… சத்தம்..! இழுத்த 10 அடி

கோவை இடையர்பாளையம் பகுதி நடராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் அனிதா. அவருக்கு சொந்தமாக டஸ்டர் கார் உள்ளது. அந்த காரை வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் அவர் வெளியே செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்ததும் திடீரென உஷ் உஷ் என்று சப்தம் வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்தவர் உடனடியாக காரை விட்டு வெளியேறி எங்கிருந்து சத்தம் வருகிறது என்று காரை சுற்றிலும் தேடிப் பார்த்துள்ளார்.அப்போது காரின் இடது புறத்தில் சிறிய வால் மட்டும் தெரிந்துள்ளது. பாம்பு என சுதாரித்துக்கொண்ட அனிதா இது சம்பந்தமாக பாம்பு பிடி வீரரான விக்னேஷ் என்பவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்த விக்னேஷ் உடனடியாக இடையர்பாளையம் பகுதிக்கு விரைந்து காருக்குள் இருந்த பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.மேலும் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அந்த பாம்பை லாவகமாக பிடித்துள்ளார்.இது குறித்து விக்னேஷ் கூறுகையில் இது விஷமற்ற சாரைப்பாம்பு வகையாகும் சுமார் 10 அடி நீளம் உள்ளது.இதனால் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த பாம்பை அடர்ந்த வனப் பகுதிக்குள் விட்டு விடுவதாக கூறியுள்ளார்.

Exit mobile version