சீர்காழி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மா சக்தி அறிமுக கூட்டம் :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தனியார் திருமண மண்டபத்தில் சீர்காழி சட்டமன்ற தொகுதியின் அதிமுக சார்பில் போட்டியிடும் மா சக்தி வேட்பாளரை மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ் பவுன்ராஜ், தலைமையில் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து ஆலோசனை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சீர்காழி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மா சக்தி அவர்களை அறிமுகப்படுத்தி 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வழங்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கைகளை எடுத்துரைத்தும் திமுக ஆட்சியில் நடைபெற்ற கொலை கொள்ளை கஞ்சா உள்ளிட்ட பிரச்சனைகளால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்த நிலையில் மீண்டும் அதிமுக தலைமையில் ஆட்சி அமைந்த உடன் இதற்கான தீர்வுகள் கிடைக்கும் என அதிமுக வேட்பாளர் நிர்வாகிகளிடம் எடுத்துரைத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக களம் காணும் என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
