மயிலாடுதுறை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமி காலையில் நடைபயிற்சி செய்வோர், மற்றும் டீக்கடை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாக்காளர்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சித்தமல்லி பழனிச்சாமி போட்டியிடுகிறார். வாக்குப்பதிவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டு வருகிறார் இன்று மயிலாடுதுறை ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலையில் நடை பயிற்சி மேற்கொள்ளும் வாக்காளர்களிடம் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தேநீர் கடைகள் மற்றும் உணவகங்கள், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரித்தார் நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, அதிமுக நகர செயலாளர் நாஞ்சில் கார்த்திக் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
