வழுவூர் 48,000 முனிவர்கள் பூஜை செய்த வரலாறு உடைய பெருஞ்சேரி தாருகாவனத்தில் 54 அடி உயர சிவன் கோயிலில் சிவராத்திரி விழா

மயிலாடுதுறை வழுவூர் அருகே 48,000 முனிவர்கள் பூஜை செய்த வரலாறு உடைய பெருஞ்சேரி தாருகாவனத்தில் 54 அடி உயர சிவன் கோயிலில் சிவராத்திரி விழா கோலாகலம். ஆயிரக்கணக்கான பக்தர்கள், வெளிநாட்டினர் பங்கேற்பு. நான்கு கால பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று ஆலயத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவை கண்டு ரசித்தனர்:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் அருகே பெருஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது. இங்கு புராண காலத்தில் 48 ஆயிரம் ரிஷிகள் தவம் புரிந்த தாருகாவனத்தில் 52 அடி உயர சிவன் வடிவிலான கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மூலவர் ஒரே கல்லினால் செய்யப்பட்ட 5 அடி லிங்கத் திருமேணியாக சிவன் காட்சி அளிக்கிறார். இந்த சிவாலயத்தில் மகா சிவராத்திரி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மூலவர் ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கத் திருமேணிக்கு விடிய விடிய நான்கு கால அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நிகழ்ச்சியில் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். ஆலயத்தில் விடிய விடிய நடைபெற்ற ஜதிலயா இசை நடனம் பள்ளியின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி பக்தர்களை கவர்ந்தது.

Exit mobile version