குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

உத்தரப்பிரதேசம், நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் செயல்படும் தனியார் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் 15 மாத பெண் குழந்தை ஒருவருக்கு பெண் ஊழியர் கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த குடியிருப்பில் வசிக்கும் தம்பதியினர் வேலைக்குச் செல்லும் காரணத்தால், தங்களின் 15 மாத பெண் குழந்தையை டேக் கேர் மையத்தில் ஒப்படைத்தனர். சில நாட்களுக்கு முன், குழந்தையின் கை, கால்களில் திடீரென தழும்புகள் தோன்றியதை கவனித்த பெற்றோர், முதலில் அலர்ஜி என எண்ணினர். பின்னர் மருத்துவ பரிசோதனையில், அவை அடிதடி, கிள்ளுதல், கடித்தல் காரணமாக ஏற்பட்ட காயங்கள் என மருத்துவர் தெரிவித்தார்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்பட்டதில், குழந்தை அழுததால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர் பிளாஸ்டிக் பேட்டால் தலையிலும் நெற்றியிலும் அடித்தது, மேலும் கிள்ளி, கடித்து காயப்படுத்தியதும் பதிவாகி இருந்தது.

இச்சம்பவத்தால் துயரடைந்த பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் பெண் ஊழியரை கைது செய்து, மேலும் வேறு குழந்தைகளுக்கும் இப்படியான கொடுமை நடந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிகழ்வு தொடர்பாக, குடியிருப்பு வாசிகள் “குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் இளம் பெண்களுக்கு பதில் அனுபவமுள்ள, பொறுப்பான வயதானவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version