மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர், கட்டுப்படுத்தாத திமுக நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், ஆயிரக்கணக்கான பங்கேற்பு :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் கடந்த 2006ம் ஆண்டு துவங்கி பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டதன் விளைவாக முறையாக திட்டம் செயல்படுத்தப்படாமல், மயிலாடுதுறை நகர் எங்கும் கழிவுநீர் பொங்கி வழிகிறது. எட்டு இடங்களில் நகராட்சி சார்பில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மோட்டார்கள் இயங்காத காரணத்தால், கழிவுநீரை முறையாக வெளியேற்ற முடியவில்லை. மேலும் மாதந்தோறும் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்காக நகராட்சி சார்பில் 10 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முறையான பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக கழிவு நீர் சேகரிப்பு தொட்டிகளில் இருந்து மயிலாடுதுறை நகரம் எங்கும் கழிவு நீர் வெளியேறி வாய்க்கால் குளங்களில் கலந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்துள்ளதுடன் பொதுமக்களுக்கு ஒவ்வாமை சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன. பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற்றத்தை தடுக்க தவறிய திமுக நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் வாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் பங்கேற்று கண்டன குரல் எழுப்பினர்.

Exit mobile version