4 ஆண்டுகளில் மாநில உரிமை பறிபோனது என்ன பறிபோனது என அதிமுகவை நோக்கி கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி,அதிமுக ஆட்சியில் பறிபோன உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் மீட்டுக்கொண்டு இருக்கின்றார் எனவும் கோவையில் பேட்டி..
விமான நிலையத்தில் அடிக்கடி பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டதாக மறைமுகமாக அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..
கோவை சிட்ரா பகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஓரணியில் தமிழ்நாடு இன்று முதல்வரால் துவங்கப்பட்டுள்ளது எனவும்,
கோவை மாவட்டத்தில் 11.58 லட்சம் குடும்பங்களையும் , குடும்பவாரியாக நேரில் சந்தித்து பா.ஜ.கவால் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளை சொல்ல இருக்கின்றோம் என தெரிவித்தார். மேலும் 4 ஆண்டுகளில் திமுக மக்களுக்கு செய்த சாதனைகளையும் , குறிப்பாக கோவை மக்களுக்கு வழங்கி இருக்கின்ற திட்டங்களையும் சொல்ல இருக்கின்றோம் என தெரிவித்த அவர்,
வரும் 3 ம் தேதி 10 சட்டமன்ற தொகுதிகளிலும் , 3117 பூத்களிலும் ,
பூத் வாரியாக இந்த பணிகளை முன்னெடுக்க இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
ஆளுமை மிக்க முதல்வராக தமிழக முதல்வர் இருக்கின்றார் என தெரிவித்த அவர், பாஜக அரசின் துரோகங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல, நாளை மாலை கோவையில் உள்ள 3 மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது எனவும் , அதனை தொடர்ந்து நாளை மறுதினம்
3117 பூத்துகளில், அவரவர் பூத்துகளில் பணிகளை முன்னெடுக்க இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
10 லட்சத்துக்கும் மேற்பட்டோரை கோவை மாவட்டத்தில் திமுக உறுப்பினராக இணைக்க இருக்கின்றோம் என தெரிவித்த அவர், தமிழகத்தில் இளைஞர்கள் எங்களுடன்தான் இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.புதிய கட்சிகளுக்கு யாரும் செல்ல வில்லை என தெரிவித்த அவர்,
துணை முதல்வர் யார் சென்றாலும் சந்திப்பார், அந்த வகையில்தான் தவெகவில் இருந்து திமுகவிற்கு வந்தவர்களை சந்தித்தார் எனவும் தெரிவித்தார்.
ஓரணியில் தமிழ்நாடு என்பதில் கவனம் செலுத்த இருக்கின்றோம் என தெரிவித்த அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார். இப்போது மொழிப்பிரச்சினை, இந்தி திணிப்பு இல்லை என்று சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பிய அவர், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று அப்போதை முதல்வர் சொன்னார். இப்போதைய அரசால் உடனடியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார். யாருக்காவது சமையல் கேஸ் மானியம் இப்போது வருகின்றதா ? என கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை விடுபட்டவர்களுக்காக 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்தவர்களை இப்பொது காணோம் எனவும் தெரிவித்தார்.
4 ஆண்டுகளில் என்ன மாநில உரிமை பறிபோனது என அதிமுகவினரிடம் கேளுங்கள் எனக்கூறிய அவர்,
கோவையை பொறுத்த வரை பெரியார் நூலகம் மாணவர்களுக்கு எந்தளவு பயனுள்ளதாக இருக்கும். தங்க நகை தொழிற்பேட்டை நீண்ட கால கோரிக்கை இவை எல்லாம் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்த அவர்,
அதிமுக ஆட்சியில் பறிபோன உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் மீட்டுக்கொண்டு இருக்கினறார்கள் எனவும் தெரிவித்தார்.
2026ல் பா.ஜ.க கூட கூட்டணி இல்லை என்று சொன்னவர்கள்தான், பா.ஜ.கவுடன் அமைதியாக உட்கார்ந்து இருக்கின்றார்கள் என தெரிவித்த அவர், டேபிளில் மிக்சர் வைத்திருந்தால் அதை சாப்பிட்டு கொண்டு இருந்திருப்பார்கள் எனவும் தெரிவித்தார். பா.ஜ.கவுடன் சேரமாட்டோம் என்று சொன்னவர்கள் இப்போது சேர்ந்து இருக்கின்றனர் என தெரிவித்த அவர்,
பா.ஜ.கவை எதிர்த்து அரசியல் பண்ண வேண்டிய நிலை இல்லை எனவும் தெரிவித்தார்.
கோவையில்
1364 கிலோ மீட்டர் 417 கோடிக்கு சாலைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றது என தெரிவித்த அவர், தேர்தல் நேரத்தில்
என்ன செயல்திட்டத்தை வைத்திருக்கின்றோம் என்பதை உங்களிடம் எப்படி சொல்லி விட முடியும் எனவும் தெரிவித்தார்.
தேர்தல் களத்தை நாங்கள் எப்போதோ துவங்கி விட்டோம் என தெரிவித்த அவர், திமுக பகுதி நிர்வாகிகள் தேர்வில் எந்த சிக்கலும் இல்லை எனவும் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் திமுகவின் கோட்டை, திமுகதான் இங்கு வெற்றி பெறும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்..